Posts
Showing posts from September, 2011
ஸ்ரீ துர்கா அஷ்டகம்
- Get link
- X
- Other Apps
வாழ் வுமானவள் துர்க்கா வாக்குமானவள் வானில் நின்றவள் துர்க்கா இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !! உலகையீன்றவள் துர்க்கை உமையுமானவள் உண்மையானவள் எந்தன் உயிரைகாப்பவள் நிலவில் நின்றவள் துர்க்கா நித்தையானவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !! செம்மையானவள் துர்க்கா ஜெகமுமானவள் அம்மையானவள் அன்பு தந்தையானவள் இம்மையானவள் துர்க்கா இன்பமானவள் மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !! உயிருமானவள் துர்க்கா உடலுமானவள் உலகமானவள் எந்தன் உடமையானவள் பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள் பண்பு பொங்கிட என்னுள் பதிந்த துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !! துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள் துறையுமானவள் இன்ப தோணியானவள் அன்பு உற்றவள் துர்க்கா...